Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சன்டே ஸ்பெஷல்: மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Military Hotel Style Aatukal Paya Recipe In Tamil: இந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக உள்ளதா? அப்படியானால் ஆட்டுக்காலை வாங்கி வந்து சமைத்து சாப்பிடுங்கள்.
இதுவரை ஆட்டுக்கால் கொண்டு வெறும் சூப் மட்டும் தான் செய்து குடித்திருந்தால், இந்த வாரம் அந்த ஆட்டுக்காலைக் கொண்டு மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைலில் பாயா செய்து சாப்பிடுங்கள். இந்த ஆட்டுக்கால் பாயா இடியாப்பம், பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கால் - 1 கிலோ
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 3
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கெட்டித்தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* தேங்காய் பால்/காய்ச்சிய பால் - 150 மிலி
* தண்ணீர் - 2 1/2 லிட்டர்
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
தேங்காய் விழுதிற்கு...
* தேங்காய் - சிறிது
* முந்திரி - 4
* பொட்டுக்கடலை - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஆட்டுக்காலை கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து அரைத்து, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தேங்காய், முந்திரி மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி மென்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும்,
பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
வதக்கியதும், கெட்டித்தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மல்லி புதினா விழுதை சேர்த்து
சிறிது நேரம் வதக்கி, அதன் பின் மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத்
தூள், சோம்புத் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் பால் அல்லது காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி விட்டு
கொதி வந்ததும், கழுவி வைத்துள்ள ஆட்டுக்காலை சேர்த்து கிளறி, 2 1/2
லிட்டர் நீரை ஊற்றி, குக்கரை மூடி, 10 விசில் விட்டு, பின் குறைவான
தீயில் வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும்
குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும்,
அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
2 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வந்ததும் அதில் மிளகுத் தூளை சேர்த்து கிளறி, 5 நிமிடம்
அப்படியே கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லி, புதினாவை சேர்த்து மூடி வைத்து, 10 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல்
ஆட்டுக்கால் பாயா தயார்.



Click it and Unblock the Notifications