Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சத்தான மிளகு சீரக அடை ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Milagu Jeeraga Adai Recipe in Tamil: தினமும் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியான காலை டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் மிளகு சீரக அடையை ஒருமுறை செய்து அதனுடன் வெல்லம் அல்லது வெண்ணெயை வைத்து சாப்பிட்டு பாருங்கள். இந்த டிபன் காம்போ சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இந்த மிளகு சீரக அடை செய்வதற்கு சுலபமாக இருப்பதுடன், சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஏனெனில் இதில் மிளகு, சீரகம், உளுந்து மற்றும் தேங்காய் என பல ஆரோக்கியமான பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த அடை டெல்டா மற்றும்செட்டிநாடு பகுதிகளில் பண்டிகைகளின் பெரும்பாலான மக்களால் விரும்பி செய்யப்படும் ஒரு உணவாகும்.
உங்களுக்கு சத்தான மற்றும் சுவையான மிளகு சீரக அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு சீரக அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 2 கப்
- கருப்பு உளுந்து - 3/4 கப்
- மிளகு - 2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1/2 கப்
- நறுக்கிய கறிவேப்பிலை - 2 ஸ்பூன்
- நெய் - அடை சுடுவதற்குத் தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பச்சரிசியை நன்றாகக் கழுவி, 2 முதல் 4 மணி நேரம் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை ஊறவைக்கத் தேவையில்லை.
- ஒரு மிக்ஸி ஜாரில், கறுப்பு உளுந்து, மிளகு, சீரகம் மற்றும் ஊறவைத்த அரிசியில் பாதியை எடுத்துக்கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, ரவை போன்ற பதத்தில் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மீதமுள்ள அரிசியையும் அதேபோல சற்று கொரகொரப்பாக அரைத்து, அதே கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
- இந்த கலவையில் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இப்போது தோசைக்கல்லைச் சூடாக்கவும். அடை மாவைச் சற்றுத் தடிமனாக கைகளால் கையில் பரப்பவும்.
- இப்போது =நெய்யை கொஞ்சம் தாராளமாக ஊற்றவும்.
- மூடி வைத்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். திருப்பிப் போட்டு, மறுபுறத்தையும் பொன்னிறமாக வேக வைக்கவும்.
- இதை ஒரு தட்டிற்கு மாற்றி வெல்லம் அலல்து வெண்ணெயுடன் சைடிஷாக வைத்து சாப்பிடவும். இதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications