Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
வெந்தயக்கீரை காளான் கிரேவி
உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் அசைவ உணவிற்கு இணையான சுவையைக் கொடுக்கும் காளான் கிரேவி செய்யுங்கள். அதுவும் வெந்தயக்கீரை காளான் கிரேவி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் அசைவ உணவிற்கு இணையான சுவையைக் கொடுக்கும் காளான் கிரேவி செய்யுங்கள். அதுவும் வெந்தயக்கீரை காளான் கிரேவி செய்யுங்கள். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு வெந்தயக்கீரை காளான் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை காளான் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200-250 கிராம்
* தயிர் - 1/4 கப்
* வெந்தயக்கீரை - 1 கப் அல்லது உலர்ந்த வெந்தயக்கீரை - 1-2 டேபிள் ஸ்பூன்
* நெய் அல்லது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 3 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* பச்சை ஏலக்காய் - 2-3
* பட்டை - 1 இன்ச்
* கருப்பு ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 2-3
செய்முறை:
* முதலில் காளானை நீரில் நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் நறுக்கிய காளானை சேர்த்து பிரட்டி 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* வெந்தயக்கீரையை நன்கு நீரில் கழுவி, அதன் இலைகளை தனியாக எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்துள்ள காளான் மற்றும் வெந்தயக்கீரை அல்லது உலர்ந்த வெந்தயக்கீரையை சேர்த்து கிளறி, பின் அதில் 1/4-1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் காளானை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து நீர் உள்ளதா என பார்த்து கிளறிவிடுங்கள். ஒருவேளை நீர் இல்லாவிட்டால், கிரேவிக்கு தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
* காளான் நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெந்தயக்கீரை காளான் கிரேவி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications