Latest Updates
-
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா? -
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
அக்டோபர் 23, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம்
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா?
MasterChef Samantha's Favourite Bisibelabath Recipe In Tamil: தற்போது சோனி டிவியில் செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் என்னும் சமையல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் கர்ப்பிணியான நடிகை சமந்தா ஹோஸ்ட் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவிற்கு பிடித்த பல உணவுகள், அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களால் தயாரிக்கப்பட்டன. அதில் சமந்தாவிற்கு பிடித்த ஒரு உணவு தான் பிஸிபேலேபாத். இந்த பிஸிபேலேபாத் என்பது வேறொன்றும் இல்லை, சாம்பார் சாதம் தான். மதிய வேளையில் சட்டென்று சமையலை முடிக்க நினைத்தால், இந்த ஒரு சாதத்தை செய்தால் போதும்.

இந்த பிஸிபேலேபாத் ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? கீழே பிஸிபேலேபாத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* அரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 5 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடிப்பதற்கு...
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* வெந்தயம் - 1 சிட்டிகை
* எள்ளு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10-15
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
* சின்ன கேரட் - 1 (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்து அரைத்த பவுடர்
* தண்ணீர் - 4 கப்
* புளி - நெல்லிக்காய் அளவு (சாறு எடுத்தது)
* வேக வைத்த சாதம்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 8
செய்முறை:
* முதலில் குக்கரில் அரிசி மற்றும் பருப்பை எடுத்துக் கொண்டு,
நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 5 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து
கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 2
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சாதத்தை நன்கு மசித்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, வெந்தயம்,
எள்ளு, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நிறம் மாற வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கத்திரிக்காய், கேரட், முருங்கைக்காய்,
பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 4 கப்
நீரை ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, 5
நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் மசித்து வைத்துள்ள சாதத்தை அதில் சேர்த்து நன்கு கலந்து 3
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து வறுத்து இறக்கி, கொதித்துக்
கொண்டிருக்கும் சாதத்துடன் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால், சுவையான
பிஸிபேலே பாத் தயார்.



Click it and Unblock the Notifications
