Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
Masala Vada Recipe : மசாலா வடை
நீங்கள் மசாலா வடை பிரியர் என்றால், அந்த மசாலா வடையை வீட்டில் எளிய முறையில் செய்து சாப்பிடுங்கள். வீட்டில் மசாலா வடை செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் ஆசை தீர சாப்பிடலாம் அல்லவா?
மாலை வேளையில் பலருக்கும் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். அப்படி தோன்றும் போது பலரது மனதிலும் முதலில் பஜ்ஜி, வடை சாப்பிட தான் ஆசை எழும். அதுவும் நீங்கள் மசாலா வடை பிரியர் என்றால், அந்த மசாலா வடையை வீட்டில் எளிய முறையில் செய்து சாப்பிடுங்கள். வீட்டில் மசாலா வடை செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் ஆசை தீர சாப்பிடலாம் அல்லவா?

உங்கள் வீட்டில் எப்படி சுவையான மசாலா வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1/2 கப்
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 4
* இஞ்சி - 1/2 இன்ச்
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து, அத்துடன் பாதி கடலைப்பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மீதமுள்ள கடலைப் பருப்பு, வெங்காயம், கொத்தமல்லி, உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா வடை தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










