Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
மரவள்ளிக் கிழங்கை ஈவ்னிங் டைம்-ல இப்படி செய்யுங்க.. எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Maravalli Kizhangu Vadai Recipe In Tamil: தற்போது மரவள்ளிக்கிழங்கு சீசன். உங்கள் வீட்டில் உள்ளோர் மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடமாட்றாங்களா? அப்படிப்பட்டவர்களை மரவள்ளிக்கிழங்கு சாப்பிட வைக்க வேண்டுமா?
மரவள்ளிக்கிழங்கு கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் மரவள்ளிக்கிழங்கு வடை. இந்த வடையை மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது கொடுத்தால், வயிறும் நிறையும், விரும்பியும் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த வடையின் சுவை மற்ற வடையை விட தனித்துவமான சுவையை கொண்டிருக்கும்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 3/4 கப்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு
* பச்சரிசி - 2 ஸ்பூன் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
* மரவள்ளிக்கிழங்கு - 2 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும். 3 மணிநேரம் கழித்து கடலைப் பருப்பை நன்கு 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த கடலைப் பருப்பில் ஒரு கைப்பிடியை
எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளதை போட்டு, அத்துடன் வரமிளகாய், சீரகம்,
இஞ்சி மற்றும் ஊற வைத்த பச்சரிசி ஆகியவற்றை சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும். பின் துருவிய மரவள்ளிக்கிழங்கில் உள்ள அதிகப்படியான பாலை
பிழிந்து எடுத்துவிட வேண்டும்.
* அதன் பின் பிழிந்த மரவள்ளிக்கிழங்கை ஜாரில் போட்டு, அத்துடன் 1
கைப்பிடி கடலைப்பருப்பை சேர்த்து ஒருமுறை அரைத்து எடுத்து, ஏற்கனவே
அரைத்து வைத்துள்ள கலவையுடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வடை மாத
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி
தட்டையாக தட்டி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், மரவள்ளிக்கிழங்கு வடை தயார்.



Click it and Unblock the Notifications











