Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மரவள்ளிக்கிழங்கும், இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்..
Maravalli Kizhangu Bonda Recipe In Tamil: மரவள்ளிக்கிழங்கு சீசன் தொடங்கிவிட்டது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டபவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் மரவள்ளிக்கிழங்கை வெறுமனே வேக வைத்து சாப்பிட கொடுக்காமல், அவற்றைக் கொண்டு வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் மரவள்ளிக்கிழங்கு கொண்டு ஸ்வீட் போண்டா செய்து கொடுங்கள். இப்படி செய்யும் போது பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* தேங்காய் - 1/2 மூடி
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கை குக்கரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி,
குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிழங்கை எடுத்து குளிர வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து,
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து, அத்துடன் 1/4 கப்
அரிசி மாவை சேர்த்து பிசைந்து மேல் மாவை தயார் செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் மரவள்ளிக்கிழங்கு கலவையை சிறிது எடுத்து உருட்டி ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்தையும்
உருண்டைகளாக்கி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து, இட்லி
மாவு கலவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், மரவள்ளிக்கிழங்கு போண்டா தயார்.
குறிப்பு:
ஒருவேளை உங்களுக்கு எண்ணெயில் பொரித்து சாப்பிட பிடிக்காவிட்டால், பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் மாவில் பிரட்டி குழிகளில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications