Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Mango Coconut Chutney Recipe In Tamil: தற்போது மாங்காய் சீசன் என்பதால், நிச்சயம் அனைவரது வீட்டிலும் மாங்காய் எப்போதும் ஸ்டாக் இருக்கும். அதோடு இந்த மாங்காயை சாம்பார், ரசம், ஊறுகாய், தொக்கு என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் மாங்காயை கொண்டும் தேங்காய் சட்னி அரைக்கலாம் தெரியுமா?

இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். இந்த சட்னியை மாங்காய் சீசன் இருக்கும் போதே செய்து சுவைத்துக் கொள்ளுங்கள். புளிப்பும், காரமும் சேர்ந்து இருக்கும் இந்த மாங்காய் தேங்காய் சட்னியை சூடான இட்லியுடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த மாங்காய் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாங்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* துருவிய தேங்காய் - 1 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தயிர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் கிளிமூக்கு மாங்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு
துண்டுகளாக்கி, 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மாங்காயை சேர்த்து, அத்துடன் துருவிய 1 கப்
தேங்காயை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் சீரகம், 4 பச்சை மிளகாய், சுவைக்கேறப்
உப்பு சேர்த்து, நீர் சேர்க்காமல் ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1/2 கப் கெட்டி தயிரை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான மாங்காய் தேங்காய் சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
