Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
வெண் பொங்கல் செய்யும் போது இந்த 1 பொருளை சேர்த்து இந்த பக்குவத்துல செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Malli Pongal Recipe In Tamil: தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று செய்து போரடித்துவிட்டதா? சரி, பொங்கல் செய்யலாம் என்று பார்த்தால், வீட்டில் உள்ளோர் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு பொங்கலை வேறு மாதிரியான சுவையில் செய்து கொடுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்யுமாறு வெண் பொங்கலை செய்யாமல், கொத்தமல்லி சேர்த்து பொங்கல் செய்யுங்கள். இதனால் சுவையும் மணமும் வேற லெவலில் அருமையாக இருக்கும். இந்த மாதிரி வெண் பொங்கலை செய்யும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்கு தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், இன்னும் அட்டகாசமாக இருக்கும். இப்படி கொத்தமல்லி சேர்த்து செய்வதால், இந்த பொங்கலுக்கு மல்லி பொங்கல் என்று பெயர். எனவே அடுத்தமுறை பொங்கல் செய்வதாக இருந்தால் இந்த மல்லி பொங்கலை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
உங்களுக்கு மல்லி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 3 1/2 கப்
* உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
* முந்திரி - 10
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கையளவு (வெறும் இலைகள் மட்டும்)
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா அரிசி மற்றும்
பாசிப்பருப்பை எடுத்து நீரில் 2-3 முறை கழுவி விட்டு, நீரை ஊற்றி 20
நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பில் உள்ள நீரை
வடிகட்டிவிட்டு, அரிசி பருப்பை குக்கரில் போட்டு, அத்துடன் 3 1/2 கப்
நீரை ஊற்றி, அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி பருப்பை நன்கு
மசித்து விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மல்லி விழுதை சேர்த்து கிளறி, குறைவான
தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள பொங்கலை சேர்த்து நன்கு கிளறி விட்டு
இறக்கினால், சுவையான மல்லி பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications