Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
கீரையும், கடலைப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி மலபார் கீரை கூட்டு செய்யுங்க... ஆரோக்கியமான சைடிஷா இருக்கும்...!
Malabar Keerai Kootu Recipe in Tamil: ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆரோக்கிய வாழ்க்கைக்கான தொடக்கமே நமது உணவில் இருந்துதான் தொடங்குகிறது. நம் உணவுகளில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொண்டால்தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.
ஆரோக்கியமான உணவுகள் என்று வரும்போது எப்போதும் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கீரை வகைகள்தான். ஒவ்வொரு கீரையும் ஒரு குறிப்பிட்ட சத்துக்களை வழங்குகிறது. பொதுவாக கீரையை பொரியல் அல்லது சூப் செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் கீரையை கூட்டு செய்தால் சாதத்தில் ஊற்றியே சாப்பிடலாம்.

மதிய வேளையில் உங்களால் தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு என்று செய்ய பிடிக்கவில்லையா? ஆம் எனில் கீரையை மலபார் ஸ்டைலில் கூட்டு செய்து சாதத்தில் ஊற்றி சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த பதிவில் சுவையான மலபார் கீரை கூட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- கீரை - 4 கட்டு
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- கடலை பருப்பு - 1/4 கப்
- ராஜ்மா - 1/4 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 4
- காய்ந்த மிளகாய் - 4
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- மஞ்சள் துாள் - 1/2 டீஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 1 கப்
- மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் கடலைப் பருப்பையும், பாசிப் பருப்பையும் குக்கரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் வேக வைக்கவும். ராஜ்மாவை தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், இடித்த பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குலையும் அளவிற்க்கு வதங்கியதும் பச்சை மிளகாய், மிளகாய் துாள் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கி வைத்த கீரையை சேர்த்து வதக்கவும். கே
- கீரை பாதியளவு வெந்ததும் அதில் வேக வைத்த ராஜ்மா, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு கலவையை சேர்த்து, உப்பு, தேவையான நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- கலவை நன்கு கெட்டியானதும், சூடாக பரிமாறவும். இது சாதம் மட்டுமின்றி சப்பாத்தி, பூரி மற்றும் தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications