மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்

Posted By:

Mahayalaya Amavasya Special Ezhukari Kootu Recipe in Tamil: இந்து மதத்தின் மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்றான மகாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. பொதுவாக அமாவாசை நாட்களிலேயே இறந்தவர்களுக்கு படையல் போட்டு வழிபடும் வழக்கம் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் உள்ளது. மகாளய அமாவாசை என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த அமாவாசை நாளாகும். எனவே இந்த நாளில் இறந்தவர்களுக்கு சிறப்பு உணவுகளை சமைத்து படையல் போட்டு வழிபடுவது நல்லது.

Mahayalaya Amavasya Special Ezhukari Kootu Recipe How to Make at Home in Tamil

இந்த மகாளய அமாவாசைக்கு ஏதாவது சிறப்பு உணவு செய்ய வேண்டுமென்று விரும்பினால் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் ஏழுக்கறி கூட்டை முயற்சி செய்து பாருங்கள். பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையானது மற்றும் தனித்துவமானது. இது உங்கள் அமாவாசை சிறப்பு உணவை கூடுதல் சிறப்பானதாக மாற்றும். இந்த கூட்டு செய்வது மிகவும் எளிதானதும் கூட.

உங்களுக்கு சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் ஏழுகறி கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 கப் காய்கறிகள்(பிடித்த ஏதாவது 7 காய்கறிகள்)
- எலுமிச்சை அளவு புளி
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் பச்சரிசி
- தேவையான அளவு உப்பு

வறுத்து அரைக்க:

- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ கப் தேங்காய்
- 4 வர மிளகாய்
- 2 ஸ்பூன் துவரம் பருப்பு
- ½ ஸ்பூன் எள்

தாளிக்க:

- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- கால் ஸ்பூன் வெந்தயம்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 2 சிட்டிகை பெருங்காயம்

செய்முறை:

- அனைத்துக் காய்கறிகளையும் கழுவி, சாம்பாருக்கு நறுக்குவது போல பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

- புளியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

- மிக்ஸியில், சிறிது நீரில் ஊறவைத்த பச்சரிசியைச் சேர்க்கவும்.

- வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களில் தேங்காயைத் தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து, பருப்பு வகைகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

- பிறகு, தேங்காயையும் மற்ற பொருட்களையும் சேர்த்து, லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.

- இந்த வறுத்த பொருட்களை ஊறவைத்த பச்சரிசியுடன் சேர்த்து, நைசாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

- நறுக்கிய காய்கறிகளைத் தண்ணீரில் ஊறவைத்து, நன்றாகக் கழுவவும். ஒருவேளை மொச்சைக்கொட்டை சேர்ப்பதாக இருந்தால் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

- ஒரு அகலமான பாத்திரத்தில் காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

- காய்கறிகள் பாதி வெந்ததும், வேகவைத்த மொச்சையைச் சேர்க்கவும்.

- அதன்பின் புளிக்கரைசலைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- பின்னர் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்து உளுத்தம் பருப்பு நிறம் மாறியதும் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

- இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் கூட்டோடு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

- அவ்வளவுதான் சுவையான ஏழு கறி கூட்டு ரெடி. இதை சூடான சாதம் அல்லது களியுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 9, 2026, 22:27 [IST]
Desktop Bottom Promotion