Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
வாழைக்காயை இப்படி ஒருவாட்டி ப்ரை பண்ணுங்க.. மீன் ப்ரையே தோத்துப்போயிடும்...
Maharashtra Style Vazhakkai Varuval Recipe In Tamil: பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் தான் அதிகமாக செய்யும் சைடு டிஷ்ஷாக இருக்கும். இதில் உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால் வாழைக்காயை பொரியல் செய்தால், சிலரே சாப்பிடுவார்கள்.
அதுவே வாழைக்காயை ப்ரை செய்தால் போட்டி போட்டு காலி செய்வார்கள். ஏனெனில் அந்த அளவில் வாழைக்காய் ப்ரை பிரமாதமாக இருக்கும். இதுவரை நீங்கள் வாழைக்காயை ப்ரையை செய்திருக்கலாம். ஆனால் மகாராஷ்டிரா ஸ்டைலில் வாழைக்காய் ப்ரை செய்தால், மீன் ப்ரையே தோற்றுப்போய்விடும். ஏனெனில் அந்த அளவில் இது பார்க்கவும் சரி, சுவையிலும் சரி அவ்வளவு அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் வாழைக்காய் இருந்தால், உடனே ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு மகாராஷ்டிரா ஸ்டைல் வாழைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மகாராஷ்டிரா ஸ்டைல் வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வாழைக்காய் - 1
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, பஜ்ஜிக்கு சீவுவது
போன்று நீளமான மற்றும் தட்டையான துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் ரவை, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள்,
மல்லித் தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், சில்லி ப்ளேக்ஸ், மிளகுத்
தூள், சாட் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு தட்டில் வாழைக்காய் துண்டுகளை பரப்பி வைக்க வேண்டும்.
* அதன் பின் அதன் மேல் கலந்து வைத்துள்ள மசாலா பொடிகளை தூவி பிரட்டி,
5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய்
ஊற்றி, வாழைக்காய் துண்டுகளை மீனை பொரிப்பது போன்று முன்னும் பின்னும்
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மகாராஷ்டிரா ஸ்டைல் வாழைக்காய் வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications











