Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.... மதுரை ஸ்டைல் காளான் சால்னா
Madurai Style Mushroom Salna Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா?
அப்படியானால் அந்த காளானைக் கொண்டு மதுரை ஸ்டைலில் காளான் சால்னாவை செய்யுங்கள். இந்த காளான் சால்னா சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு மதுரை ஸ்டைல் காளான் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் காளான் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* முந்திரி - 10
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
சால்னாவிற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* காளான் - 200 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காளானை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, பொட்டுக்கடலை, கசகசா,
பச்சை மிளகாய், சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு காளானை சேர்த்து நன்கு கிளறி, அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு
நிமிடம் வதக்கி, 2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில்
வைத்து 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான மதுரை ஸ்டைல் காளான் சால்னா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications