Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
மாவிளக்கு மாவு ரொம்ப மிச்சமாகிருச்சா? அதை வைச்சு இந்த மாதிரி பலகாரம் பண்ணுங்க - சூப்பரா இருக்கும்
Maavilakku Maavu Adhirasam Recipe in Tamil: தற்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான திருவிழாக்கள் அம்மன் சார்ந்தவையாகவே இருக்கும். அம்மன் திருவிழா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மாவிளக்குதான். கிட்டதட்ட அனைவரின் வீட்டிலும் அம்மனுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுவார்கள். ஆனால் அனைவரும் மாவிளக்கு மாவை சாப்பிடுவார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

உங்கள் வீட்டிலும் மாவிளக்கு மாவை சாப்பிடாதவர்கள் இருக்கிறார்களா? அப்படியானால் அந்த மாவை வைத்து வேறுசில பலகாரங்கள் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான், மாவிளக்கு மாவை வைத்து பணியாரம், அதிரசம் போன்ற அனைவருக்கும் பிடித்த சில உணவுகளை செய்யலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- மீதமான மாவிளக்கு - 2 கப்
- தேங்காய் - ½ மூடி
- வாழைப்பழம் - 2
- வெல்லம் - தேவையான அளவு
- ஏலக்காய் - 3
- ஆப்ப சோடா - ¼ டீ ஸ்பூன்
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
- மாவை நன்றாக உதிர்த்து தூளாக எடுத்து கொள்ளவும்.
- தேங்காயை திருவியோ அல்லது நறுக்கியோ தனியா எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் உதிர்த்து வைத்த மாவு மற்றும் துருவிய தேங்காயை
சேர்க்கவும்.
- அதனுடன் வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி சேர்த்து
கொள்ளவும்.
- அதில் சுவைக்கு ஏற்ப வெல்லம், ஏலக்காய், ஆப்ப சோடா, உப்பு மற்றும்
சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- இட்லி மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி
அரை மணி நேரத்திற்கு அப்படியே வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- எண்ணெய் சூடானது அரைத்து வைத்த மாவை எண்ணெயில் சிறிது சிறிதாக
ஊற்றவும்.
- நன்றாக வெந்து மேலே எழுத்து வரும் போது திருப்பி விட்டு இரண்டு
பக்கமும் நன்றாக சிவக்கும் படி வேக விட்டு எடுக்கவும்.
மாவிளக்கு பணியாரம் செய்முறை:
- மேலே சொன்ன மாவு கலவையில் அரை மூடி தேங்காயை சிறிய துண்டுகளாக
நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- பணியார கல்லை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி சூடாக
விடவும். (நெய் தாராளமாக ஊற்றினால் ஒட்டாமல் வரும்.)
- பின் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான
இனிப்பு பணியாரம் ரெடி!
- இதே போல் தோசை கல்லில் ஊற்றி எடுத்தால் சுவையான மாவிளக்கு பான் பேன்
கேக் அல்லது குட்டி தோசை ரெடி!
மாவிளக்கு அதிரசம்:
- மாவிளக்கு மாவை நன்றாக உதிர்த்து எடுத்து கொள்ளவும்.
- அதில் ஒரு டீ ஸ்பூன் எள், ½ டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் ஒரு
சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு வெல்லப்பாகு சேர்த்து இளக்கமாக பிசைந்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- மாவில் இருந்து சிறு பகுதியை எடுத்து உருட்டி கொள்ளவும்.
- அதை எண்ணெய் அல்லது நெய் தடவிய வாழை இலை அல்லது பாலிதீன் பையில்
வைத்து தட்டி எடுத்து கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் தட்டி வைத்த மாவை சேர்த்து இரண்டு பக்கமும் வேக
விட்டு எடுத்தால் சுவையான மாவிளக்கு அதிரசம் ரெடி!



Click it and Unblock the Notifications