Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Lunchbox Special Beetroot Coconut Rice Recipe In Tamil: தினமும் லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்பது முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? உங்கள் பிள்ளைகள் வெரைட்டி ரைஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் அடிக்கடி வெரைட்டி ரைஸ் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான வெரைட்டி ரைஸ் செய்து போரடித்துவிட்டதா?

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? ஆனால் உங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு பீட்ரூட் மற்றும் தேங்காய் கொண்டு சாதம் செய்து கொடுங்கள். இந்த பீட்ரூட் தேங்காய் சாதம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த பீட்ருட் தேங்காய் சாதம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ருட் தேங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* நறுக்கிய முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பீட்ரூட் - 2 (துருவியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசுமதி அரிசி - 1 கப் அல்லது 250 மிலி (30 நிமிடம் ஊற வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் குக்கரில் பாசுமதி அரிசியை கழுவி சேர்த்து, அதில் 1 1/2 முதல்
2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சாதத்தை ஒரு தட்டில் போட்டு
பரப்பி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி ஆகியவற்றை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய 2 பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி விட
வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 2
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, குளிர வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து
கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பீட்ரூட் தேங்காய்
சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
