Latest Updates
-
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்..
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப பழைய சாதம் வெச்சு இந்த ப்ரேக் ஃபாஸ்ட் செஞ்சு சாப்பிடுங்க...
Leftover Rice Recipes: உங்கள் வீட்டில் பழைய சாதம் உள்ளதா? அந்த பழைய சாதத்தை தூக்கி போட மனம் இல்லையா? அப்படியானால் அந்த பழைய சாதம் கொண்டு ஒரு சூப்பரான ட்ரெண்டியான காலை உணவை செஞ்சு சாப்பிடுங்கள். அதாவது கார்ன் ப்ளேக்ஸ் மாதிரி செய்து சாப்பிடுங்கள்.
எப்படி பழைய சாதம் கொண்டு ப்ளேக்ஸ் தயாரிப்பது என்று பலரும் யோசிக்கலாம். சொல்லப்போனால் கடைகளில் விற்கப்படும் ப்ளேக்ஸை விட இந்த சாதம் கொண்டு செய்யப்படும் ப்ளேக்ஸ் சத்தானது, சுவையானது, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இப்படி செய்யும் போது குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பழைய சாத ப்ளேக்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பழைய சாத ப்ளேக்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் - 2 டீஸ்பூன்
* பால் - தேவையான அளவு
* நட்ஸ் - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது)
* ஆப்பிள், வாழைப்பழம் - பொடியாக நறுக்கியது
செய்முறை:
* முதலில் வீட்டில் மீந்து போன பழைய சாதம் இருந்தால், ஒரு தட்டில்
எண்ணெய் சிறிது தடவி, அதில் அந்த சாதத்தைப் பரப்பி போட்டு, வெயிலில்
ஈரப்பதம் போக நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு சில்வர் சல்லடை வடிகட்டியை
எடுத்து, அதில் சிறிது காய வைத்த சாதத்தை போட்டு, அதை அப்படியே
எண்ணெயில் வைத்து, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று
அனைத்து சாதத்தையும் பொரித்து எடுத்து, ஒரு தட்டில் போட்டு உலர்த்திக்
கொள்ள வேண்டும். இப்போது ரைஸ் ப்ளேக்ஸ் தயார்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரையை சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, சர்க்கரை கரைந்து
ஒரு கம்பி பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கொக்கோ பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து 2 கப் பொரித்து வைத்துள்ள ரைஸ் ப்ளேக்ஸை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும். ஆரம்பத்தில் சற்று நீர் போன்று இருக்கும்.
இருப்பினும் தொடர்ந்து கிளறி விடும் போது, ஈரப்பதம் நீங்கி, உதிரி
உதிரியாக கொக்கோ ப்ளேக்ஸ் தயாராகிவிடும். பின் அதை இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, அதில் இந்த கொக்கோ
ரைஸ் ப்ளேக்ஸை சேர்த்து, சுவைக்கேற்ப தேன் அல்லது சர்க்கரை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் விருப்பமான நட்ஸ்களை பொடியாக நறுக்கி சேர்க்க
வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழத்தை சேர்த்து
கிளறினால், சுவையான கொக்கோ ரைஸ் ப்ளேக்ஸ் ப்ரேக் ஃபாஸ்ட் தயார்.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications
