Latest Updates
-
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க...
Chicken Fried Rice Using Leftover Rice In Tamil: மதியம் சமைத்த சாதம் அதிகம் உள்ளதா? அந்த சாதத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ப்ரைடு ரைஸ் பிடிக்குமா?
அப்படியானால் சிக்கனை வாங்கி வந்து, அதை 65 போன்று செய்து, நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் அந்த சிக்கனுடன் மீந்து போன சாதத்தை சேர்த்து ப்ரைடு ரைஸ் செய்து கொடுங்கள். இதனால் அந்த சாதமும் காலியாகும், வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு சிக்கன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ஃப்ரைடு ரைஸ் செய்வதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 3 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* முட்டை - 2
* மீந்து போன சாதம் - 1 கப்
* மிளகுத் தூள் - 1 1/4 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத சிக்கனை கழுவி, அதில் மிளகாய் தூள்,
மல்லித் தூள், கரம் மசாலா, சோள மாவு, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு,
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள
சிக்கன் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் நன்கு
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கன் துண்டுகளை
பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ்
மற்றும் குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு காய்கறிகள்
வேகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மீந்து போன சாதம், ப்ரை செய்து வெட்டி வைத்துள்ள
சிக்கன் துண்டுகளை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், சோயா சாஸ்
மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு உயர் தீயில் வைத்து, மசாலா
அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுவையான சிக்கன்
ப்ரைடு ரைஸ் தயார்,



Click it and Unblock the Notifications