Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
மீந்து போன சாதம் இருந்தா.. அத தூக்கி எறியாம.. இந்த மாதிரி பணியாரம் செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்..
Leftover Rice Paniyaram Recipe In Tamil: உங்கள் வீட்டில் நேற்று சமைத்த சாதம் நிறைய உள்ளதா? அந்த சாதத்தை தூக்கி எறிய விருப்பம் இல்லையா? அதே சமயம் அதை கஞ்சியாகவும் குடிக்க விருப்பம் இல்லையா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தைக் கொண்டு வேறு ஏதாவது செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பணியாரம் பிடிக்குமானால், அந்த பணியாரத்தை செய்யுங்கள். என்னது, மீந்து போன சாதத்தில் பணியாரமா என்று கேட்கலாம். உண்மையில் மீந்து போன சாதம் கொண்டு பணியாரம் செய்தால், அந்த பணியாரம் இன்னும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி பணியாரம் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மீந்து போன சாதத்தை மிக்சர் ஜாரில் போட்டு, 1/4 கப் நீரை
ஊற்றி நன்கு மென்மையான அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில், அரைத்த சாதத்தை எடுத்து, அத்துடன் ரவையை
சேர்த்து 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து, 10 நிமிடம்
மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய கேரட்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
மாவுடன் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்
குழிகளில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மீந்து போன சாத
பணியாரம் தயார்.
Image Courtesy: from our nest



Click it and Unblock the Notifications