Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு இப்படி தோசை சுடுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்...
Leftover Rice Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டில் பழைய சாதம் உள்ளதா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தைக் கொண்டு தோசை சுடுங்கள். மீந்து போன சாதத்தைக் கொண்டு தோசை சுட முடியுமா என்று பலரும் கேட்கலாம்.
நிச்சயம் சுட முடியும். அதுவும் தோசை மாவைக் கொண்டு தோசை சுடுவதை விட, மீந்து போன சாதம் கொண்டு தோசை சுடும் போது, அந்த தோசை இன்னும் சுவையாக இருக்கும். அதுவும் இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று அனைத்துமே அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி தோசை செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதத்தைக் கொண்டு செய்யக்கூடிய தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* ரவை - 1 கப்
* லேசாக புளித்த தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீந்து போன சாதத்தை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் ரவையை சேர்க்க வேண்டும். இந்த ரவை வறுத்ததாகவோ,
வறுக்காததாகவோ இருக்கலாம்.
* பின்பு அதில் லேசாக புளித்த தயிரை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு
கிளறி விட வேண்டும்.
* இந்த கலவையை 10-15 நிமிடம் நன்கு மூடி வைத்து ஊற வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் ஆனதும் மூடியைத் திறந்து, ஒருமுறை நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் இவற்றைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
நீரைத் தெளித்து துடைத்துவிட்டு, கலந்து வைத்துள்ள மாவை தோசையாக
ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் தோசையை வேக வைக்க வேண்டும்.
உயர் தீயில் வைத்தால், தோசை கருகிவிடும். எனவே மிதமான தீயில் வைத்தே
தோசை சுடுங்கள்.



Click it and Unblock the Notifications