Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Ladies Finger Dosa Recipe : வெண்டைக்காய் தோசை
சற்று வித்தியாசமான தோசையை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வெண்டைக்காய் தோசை செய்து சாப்பிடுங்கள்.
நீங்கள் தோசை பிரியரா? எப்பவும் ஒரே மாதிரியான தோசை செய்து சாப்பிட்டு போர் அடிக்கிறதா? சற்று வித்தியாசமான தோசையை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வெண்டைக்காய் தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த வெண்டைக்காய் தோசை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த தோசையை கார சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு வெண்டைக்காய் தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி அரிசி - 1 கப்
* வெண்டைக்காய் - 8-10
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அரிசியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* வெண்டைக்காயின் முனைப்பகுதிகளை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரிசியை நன்கு கழுவி, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வெண்டைக்காயையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவை உடனே பயன்படுத்தலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்த மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், வெண்டைக்காய் தோசை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications







