Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கிருஷ்ண ஜெயந்திக்கு ஸ்பெஷல் ஸ்வீட் செய்யணுமா? அப்ப 10 நிமிஷத்துல இந்த லட்டு செய்யுங்க..
Krishna Jayanthi Special Ladoo Recipe In Tamil: கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு படைக்க ஒரு எளிமையான ஸ்வீட்டை செய்ய நினைக்கிறீர்களா? கிருஷ்ணருக்கு லட்டு என்றால் பிடிக்கும். லட்டுவில் பல வெரைட்டிகள் உள்ளன.
அதில் மிகவும் சிம்பிளான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு லட்டு செய்ய நினைத்தால், வேர்க்கடலை பொடுக்கடலைக் கொண்டு லட்டு செய்யுங்கள். இந்த லட்டு டக்கென்று 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கு ஸ்பெஷலாக லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* ஏலக்காய் - 3
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும்
ஏலக்காய் சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 2
1/2 கப் நீரை ஊற்றி, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி
உருகியதும், ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* ரவை நன்கு நிறம் மாறியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு
3 நிமிடம் வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து 3
நிமிடம் கிளறி வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, கட்டிகள்
சேராதவாறு நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* ரவையானது நீரை உறிஞ்சியதும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 2-3
நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு வெதுவெதுப்பாக இருக்கும் போதே, அதை நன்கு பிசைந்து,
பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடித்தால், லட்டு
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications