For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: கேரள ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம்

நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு வித்தியாசமான அதே சமயம் ருசியான ஒரு இனிப்பை தயாரித்துப் படைக்க விரும்பினால், அதற்கு கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் சரியாக இருக்கும்.

Posted By:
|

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டது. இன்று பலரது வீட்டிலும் கிருஷ்ணருக்கு பிடித்தவாறு பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கொண்டு பல பலகாரங்கள் செய்து படைப்பார்கள். இந்த வருடம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உலகமே வீட்டில் முடங்கியுள்ளது. இதனால் கோவில்களுக்கு சென்று கிருஷ்ணரை வணங்க முடியாமல் பலரும் வீட்டிலேயே கிருஷ்ணரின் சிலையை வைத்து வழிபடுவார்கள்.

MOST READ: கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா? இத படிங்க...MOST READ: கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா? இத படிங்க...

சிலர் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை நினைத்து விரதம் இருந்து, கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை சமைத்து படைத்து, கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைத்து, பூஜை செய்வார்கள். நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு வித்தியாசமான அதே சமயம் ருசியான ஒரு இனிப்பை தயாரித்துப் படைக்க விரும்பினால், அதற்கு கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் சரியாக இருக்கும்.

Krishna Jayanthi Special Kerala Style Pasi Paruppu Payasam Recipe In Tamil

இக்கட்டுரையில் கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1 கப்

* வெல்லம் - 1 கப் (துருவியது)

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

* நீர் போன்ற தேங்காய் பால் - 2 1/2 கப்

* முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்

* உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் - 4

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.

* பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் எஞ்சிய 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!

[ of 5 - Users]
English summary

Krishna Jayanthi Special Kerala Style Pasi Paruppu Payasam Recipe In Tamil

Want to know how to prepare kerala style pasi paruppu payasam during krishna jayanthi festival? Check out and give it a try...
Desktop Bottom Promotion