Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
இட்லி, தோசைக்கு சத்தான, டேஸ்டான சட்னி வேணுமா? அப்ப இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க... சூப்பரா இருக்கும்...!
Kovakkai Chutney Recipe in Tamil: எப்போதும் டிபன் வகைகளுக்கு என்ன சட்னி செய்யலாம் என்பது நமது அன்றாட கவலைகளில் ஒன்று. என்ன தான் செய்தாலும், தக்காளி சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் செய்வோம்.
என்னதான் மாற்றி செய்தாலும் இதில் சில பொருட்களை கூட்டி குறைத்து சுவையை மாற்ற முயற்சிப்போம். ஆனால் காய் வகைகளை வைத்து சட்னி செய்ய என்றாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம் இன்று காய் வகைகளில் ஒன்றான கோவைக்காயை வைத்து எப்படி சட்னி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- கோவைக்காய் - ¼ கிலோ,
- பெரிய வெங்காயம் - 3
- பூண்டு - 6 பல்
- காய்ந்த மிளகாய் -4
- பச்சை மிளகாய் - 3
- கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
- புளி - சிறிதளவு (எலுமிச்சை அளவு)
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- கோவைக்காயை தண்ணீரில் சேர்த்து மண் இல்லாமல் சுத்தமாக அலசி கொள்ளவும்.
- பின் அதன் முனை பகுதி இரண்டையும் நீக்கி விட்டு நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் தோல் உரித்து வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் வெந்தயம், கொத்தமல்லி விதைகள், வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- கடைசியாக புளியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- ஆறிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கருவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் உடலிற்கு ஆரோக்கியமான கோவைக்காய் சட்னி ரெடி!
- இது இட்லி, தோசை என டிபன் வகைகளுக்கும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications