Latest Updates
-
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்
கொத்தவரங்காய் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...
Kothavarangai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு நல்ல சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? ஆனால் அந்த கொத்தவரங்காயை உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கொத்தவரங்காயைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள். இப்படி கிரேவி செய்யும் போது, கொத்தவரங்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இந்த கொத்தவரங்காய் கிரேவி குறித்து அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கொத்தவரங்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தவரங்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* இஞ்சி - 2 இன்ச்
* முழு பூண்டு - 1
* பச்சை மிளகாய் - 5
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தவரங்காய் - 200 கிராம்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, முழு பூண்டு, பச்சை மிளகாய்
மற்றும் 1 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கடலை மாவு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய கொத்தவரங்காயை சேர்த்து, அத்துடன் மல்லித்
தூள் தூவி 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 1 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்தால், சுவையான கொத்தவரங்காய் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications
