Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கொத்தவரங்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!
Kothavarangai Poriyal Recipe In Tamil: கொத்தவரங்காய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதன் லேசான கசப்புத்தன்மையால் நிறைய பேர் அதை சாப்பிடமாட்டார்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கொத்தவரங்காயை சாப்பிடமாட்டார்களா? ஆனால் அவர்களை கொத்தவரங்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அதைக் கொண்டு பொரியல் செய்யுங்கள்.
அதுவும் நீங்கள் செய்வது போன்று பொரியல் செய்யாமல், கீழே கொடுத்துள்ள பக்குவத்தில் பொரியல் செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் இப்படி பொரியலை செய்யும் போது, அடிக்கடி இந்த பொரியலை செய்து கொடுக்குமாறும் கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த கொத்தவரங்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தவரங்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கொத்தவரங்காய் - 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கொத்தவரங்காயின் முனைகளை நீக்கிவிட்டு, ஓரளவு நீளத்
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். முக்கியமாக பொரியலுக்கு பிஞ்சு
கொத்தவரங்காயை பார்த்து வாங்கிக் கொண்டால், சுவையாக இருக்கும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கொத்தவரங்காயை போட்டு, அத்துடன் மஞ்சள்
தூள் மற்றும் காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி மூடி வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, காய் வெந்துவிட்டால், அதை
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், மிளகாய் தூள்,
பெருங்காயத் தூள், சீரகம் சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலையையும் தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள கொத்தவரங்காயை நீருடன் அப்படியே
சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வேக
வைத்து இறக்கினால், கொத்தவரங்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











