Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு... செஞ்சு பாருங்க... சூப்பரா இருக்கும்..
Andhra Style Kothamalli Thokku Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதானமான காலை அல்லது மாலை உணவாக இருக்கும். இன்றும் உங்கள் வீட்டில் இதைத்தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்யுங்கள். இது வழக்கமான கொத்தமல்லி சட்னி போல இல்லாமல் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
இப்படி கொத்தமல்லியை தொக்கு செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த தொக்கு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடனும் பிசைந்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்த பதிவில் அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கட்டு கொத்தமல்லி
- 1 கப் புதினா
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 4 வர மிளகாய்
- 5 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் தனியா
- உப்பு தேவையான அளவு
- 1 துண்டு வெல்லம்
- புளி எலுமிச்சை அளவு
செய்முறை:
- முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் பாதியளவு கடுகு, வெந்தயம், தனியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டை தட்டி சேர்த்து வதக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அரைத்து வைத்த கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு ரெடி!
- சூடான இட்லி அல்லது தோசையுடன் இதை பரிமாறுங்கள்.



Click it and Unblock the Notifications
