Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பச்சடியை செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Andhra Style Kothamalli Pachadi Recipe in Tamil: இட்லி, தோசை செய்வது எவ்வளவு எளிதானதோ அதற்கு என்ன சட்னி செய்வது என்று சிந்திப்பது என்பது மிக மிக கடினமானது. இட்லி, தோசைக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றைத்தான் பெரும்பாலும் செய்வோம். இது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். எனவே புதுப்புது சட்னிகள் செய்வது மிகவும் அவசியமானதாகும்.
இந்த நிலையில் ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பச்சடி இட்லி, தோசைக்கு சிறப்பான சைடிஷாக இருக்கும். ஆந்திரா கொத்தமல்லி பச்சடி என்பது கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பச்சடியாகும். இந்த காரசாரமான கொத்தமல்லி பச்சடி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாகவும் இருக்கும். இந்த கொத்தமல்லி பச்சடியை சூடான சாதத்தில் போட்டு அதில் நெய் ஊற்றி சாப்பி அருமையாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 8 பச்சை மிளகாய்
- 3 ஸ்பூன் புளி
- தேவையான அளவு உப்பு
- 2 கப் நறுக்கிய கொத்தமல்லி
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 2 காஷ்மீரி வரமிளகாய்கள்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
- 2 ஸ்பூன் துருவிய வெல்லம்
செய்முறை:
- முதலில் பச்சை மிளகாய், புளி, உப்பு மற்றும் சிறிதளவு நீரை ஒன்றாகச் சேர்த்து, மிக்சியில் போட்டு மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின் கொத்தமல்லி மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, மீண்டும் அரைத்து மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை அல்லது 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கவும்.
- வெல்லத்தைச் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கொத்தமல்லி பச்சடி ரெடி. இந்தக் கொத்தமல்லிப் பச்சடியை இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
