Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
Kothamalli Kara Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் மதிய உணவுக்கு சமைக்கப்படுவது சாம்பார் அல்லது புளிக்குழம்புதான், ஆனால் இந்த இரண்டையே எத்தனை நாட்கள்தான் செய்து கொண்டிருப்பது. இதுபோன்ற நேரத்தில் பொதுவாக குருமா அல்லது காரக்குழம்பு பக்கம் நம்முடைய கவனம் செல்லும். ஆனால் அதை வைக்க உங்க வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படினா கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா போதும் சூப்பரான ஒரு குழம்பை வைக்கலாம்.
பொதுவாக கொத்தமல்லியை வைத்து நாம் சட்னிதான் அரைத்திருப்போம், ஆனால் அதை வைத்து அட்டகாசமான சுவையில் குழம்பும் செய்யலாம். காய்கறிகள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் கொத்தமல்லியை வைத்தே சாதத்துக்கு அருமையான கொத்தமல்லி காரக்குழம்பு செய்யலாம். இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் சுவையானதும் கூட, மேலும் இதில் சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது.

உங்களுக்கு கொத்தமல்லி காரக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி காரக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கொத்தமல்லி இலை
- 1 டேபிள் ஸ்பூன் புளி
- 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 10 சின்ன வெங்காயம்
- 10 பூண்டு பல்
- ¼ டீஸ்பூன் வெல்லம்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- புளியை 20 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும். பின்னர் இதை கரைத்து 2 கப் புளிச்சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- நறுக்கிய கொத்தமல்லியை மிக்சி ஜாரில் சேர்த்து குறைவான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
- பூண்டு நன்கு வாசனை வந்ததும், புளி சாறு, சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்த கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்து கெட்டியாகும் வரை காத்திருக்கவும் பின்னர் வெல்லத்தைச் சேர்க்கவும்.
- வெல்லம் முழுக்க கரைந்ததும், அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் திக்கான கொத்தமல்லி குழம்பு ரெடி. இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
