Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சன்டே ஸ்பெஷல் : சுவையான... கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி
Kongunadu Vella Mutton Biryani: இன்று விடுமுறை என்பதால் உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா? வீட்டில் உள்ளோர் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் வீட்டில் பிரியாணியை செய்ததில்லையா? அப்படியானால் இன்று ஈஸியான செய்முறையைக் கொண்ட ஒரு அசத்தலான கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணியை செய்யுங்கள்.
இந்த வெள்ளை மட்டன் பிரியாணி பார்க்க வெள்ளையாக இருந்தாலும், சுவை வேற லெவலில் இருக்கும். நிச்சயம் இந்த பிரியாணியை வீட்டில் முயற்சித்தால், வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறலாம். முக்கியமாக இந்த ரெசிபி பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* சீரக சம்பா அரிசி - 2 கப்
மசாலா அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 7
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* கிராம்பு - 4
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 2
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (தட்டியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 10
* புதினா இலைகள் - 1/2 கப்
* கொத்தமல்லி - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் மட்டனைப் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன்
உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மசாலா அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள்
அனைத்தையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு சீரக சம்பா அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும்
எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கியதும், அரைத்த
மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு பச்சை மிளகாயை வெட்டாமல் முழுமையாக போட்டு, புதினா மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஏற்கனவே வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து,
தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் நீர் என 3 கப் நீரை ஊற்றி நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதித்ததும், ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை
கழுவிப் போட்டு கிளறி, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 2 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு வாழை இலையால் குக்கரை 10
நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், சுவையான கொங்குநாடு வெள்ளை
மட்டன் பிரியாணி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications








