Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொங்குநாடு உருளை குருமா
Kongunadu Urulai Kurma: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா?
அப்படியானால் அதைக் கொண்டு கொங்குநாடு உருளை குருமாவை செய்யுங்கள். இந்த உருளை குருமா சப்பாத்தி, தோசைக்கு மட்டுமின்றி, பூரி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்களுக்கு கொங்குநாடு உருளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கொங்குநாடு உருளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி விழுது - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* பூண்டு - 3 பல் (துருவியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 1
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து ட்ரை ரோஸ்ட்
செய்து தனியாக எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய்
சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி, நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி விழுது, மஞ்சள் தூள், அரைத்த மசாலாவை சேர்த்து
கிளறி, பின் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான
தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து
கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கொங்குநாடு
உருளை மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications