Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
1 கைப்பிடி கொண்டைக்கடலை இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல ஒருவாட்டி இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Kondakadalai Popcorn Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் மொறுமொறுவென்று சாப்பிட ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு சிக்கன் பாப்கார்ன் என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த பாப்கார்னை செய்து கொடுங்கள். அதுவும் சிக்கனைக் கொண்டு அல்ல, கொண்டைக்கடலை கொண்டு செய்யுங்கள்.
இந்த கொண்டைக்கடலை பாப்கார்ன் சிக்கன் பாப்கார்ன் போன்றே மிகவும் சுவையாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். உங்கள் பிள்ளைகள் கொண்டைக்கடலையை சாப்பிட மறுப்பார்கள் என்றால், அவர்களுக்கு அந்த கொண்டைக்கடலையைக் கொண்டு பாப்கார்ன் செய்து கொடுங்கள். இதனால் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த பாப்கார்ன் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு கொண்டைக்கடலை பாப்கார்ன்னை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை பாப்கார்ன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு...
* பெரிய கொண்டைக்கடலை - 1 கைப்பிடி
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
ப்ரை செய்வதற்கு...
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரிசி மாவு - 2 டீஸ்பூன்
* கடலை மாவு - 3-4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பெரிய கொண்டைக்கடலையை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த கொண்டைக்கடலையை 8 மணிநேரம் கழித்து, குக்கரில்
கழுவிப் போட்டு, கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, 1 ஸ்பூன்
உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு,
கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கொண்டைக்கடலையுடன் 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 2 டீஸ்பூன் அரிசி மாவு, 3 டீஸ்பூன் கடலை மாவு, 1/4
டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து, ஏற்கனவே கொண்டைக்கடலை வேக வைக்க உப்பு
சேர்த்துள்ளதால், கவனமாக சிறிது உப்பு சேர்த்து கரண்டியால் மசாலாக்கள்
அனைத்தும் கொண்டைக்கடலையில் ஒட்டிக் கொள்ளுமாறு நன்கு கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கொண்டைக்கடலையை சேர்த்து பொன்னிறமாக
ப்ரை செய்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான கொண்டைக்கடலை
பாப்கார்ன் தயார்.



Click it and Unblock the Notifications










