Latest Updates
-
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite Iran war -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
பிச்சிக்குது விற்பனை.. ரூ.10,499 க்கு 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்? | Vivo T4 Lite 5G 15 Percent Discount
கொங்கு நாடு கொள்ளு மசியல் ரெசிபி...இதை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க... உடல் எடை வேகமாக குறையும்...!
Kollu Masiyal Recipe in Tamil: நீங்கள் அடிக்கடி பருப்பை செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரிதான் பருப்பை கடைவீர்களா? அப்படியானால் ஒருமுறை கொங்கு ஸ்டைல் கொள்ளு பருப்பை கடையில் செஞ்சு பாருங்க. இந்த கொங்கு நாடு கொள்ளு பருப்புக் கடையல் ரசம் சளி, இருமலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், அடிக்கடி கொள்ளு பருப்பு கடையலை செய்து சாப்பிடலாம். இந்த கொங்கு ஸ்பெஷல் கொள்ளு மசியலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கொள்ளு மசியலை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும்.

இந்த கொங்கு ஸ்டைல் கொள்ளு மசியலானது கொள்ளு பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு பிரபலமான பாரம்பரியமான கொங்குநாடு உணவாகும்.
உங்களுக்கு ஆரோக்கியமான கொங்கு ஸ்டைல் கொள்ளு மசியலானது எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்டைல் கொள்ளு மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு வேகவைக்க:
- ½ கப் கொள்ளு
- 4 பூண்டு பல்
- 1 தக்காளி நறுக்கியது
- 1 டீஸ்பூன் கருப்பு மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 2 வர மிளகாய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்
- 6 பூண்டு பல்
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- ½ டீஸ்பூன் பெருங்காயம்
- 10 நறுக்கிய சின்ன வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஒரு கடாயில் கொள்ளு பருப்பை போட்டு, நிறம் மாறி, மொறுமொறுப்பாக மாறும் வரை வறுக்கவும். இதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.
- கொள்ளு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- உடைத்த கொள்ளு பருப்பை நன்றாக கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பூண்டு, மிளகு, கொத்தமல்லி விதைகள், சீரகம் மற்றும் வர மிளகாய் சேர்க்கவும்.
- இதை மூடி வைத்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். முழு கொள்ளு பருப்பை வேக வைத்தால் கூடுதலாக இரண்டு விசில் விடவும். விசில் அடங்கியதும் பருப்பை ஆற வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சூடாக்கி, பூண்டு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் சமைத்த கொள்ளு பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது ஒரு பருப்பு மத்தைப் பயன்படுத்தி கொள்ளு பருப்பை மென்மையாக மாறும் வரை நன்றாக மசிக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கொங்கு நாடு கொள்ளு மசியல் ரெடி. இதை சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











