Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனிபகவானின் ராசியில் நடக்கும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியப்போகுதாம்...!
Solar Eclipse 2026: 2026 ஆம் ஆண்டில், இரண்டு சூரிய மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் வரப்போகிறது. இதில் 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 அன்று நிகழ்கிறது. பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:26 மணிக்கு தொடங்கி மாலை 7:57 மணிக்கு முடிவடைகிறது, கிட்டதட்ட 4 மணி 32 நிமிடங்கள் நீடிக்கப்போகிறது. இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தெரியாது.
இது வானியல்ரீதியாக மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதுமட்டுமின்றி இது ஜோதிடரீதியாகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இந்த கிரகணம் சனிபகவான் ஆளும் கும்ப ராசியில் நடக்கிறது. ந்த சக்திவாய்ந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் சிறப்பான நன்மைகளை அடையப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்களின் புதிய முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சரியானவாய்ப்பை அளிக்கும். அவர்களின் தொழில் வாழ்க்கையில், கடின முயற்சிகள் காரணமாக பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும்.
மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறந்த முடிவுகளை எதிர்பார்க்கலாம் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றிகரமாக பங்கேற்கலாம். கூட்டு வணிகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில், அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
ரிஷபம்
இந்த சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் தொழில் வளர்ச்சியில் நேர்மறையான பலன்களை அளிக்கும். ரிஷப ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமண வாழ்க்கையில் நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கும் இந்த சூரிய கிரகணம் பல நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த அரிய கிரகணத்தின் காரணமாக அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடிவடையும். அவர்களின் பொருளாதார நிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இது வேலை செய்பவர்களுக்கு பல நேர்மறையான நன்மைகளைத் தருகிறது.
அலுவலகத்தில் நிலவி வந்த பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் இப்போது நிறைவேறும். காதலர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
