Just In
- 23 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 2 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி
கேரளாவில் பீட்ரூட் பச்சடி மிகவும் பிரபலமானது. இந்த பச்சடி கண்களைப் பறிக்கும் அளவில் பிங்க் நிறத்தில் சுவையாக இருக்கும். இந்த கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இரும்புச்சத்து அதிகம் கொண்ட ஓர் காய்கறி தான் பீட்ரூட். இது இனிப்புச் சுவை கொண்டது. பலருக்கு இதை பச்சையாக சாப்பிட பிடிக்கும். பீட்ரூட்டைக் கொண்டு பொரியல், சாம்பார் என்று சமைக்கலாம். இது தவிர, பீட்ரூட்டைக் கொண்டு பச்சடியும் செய்யலாம். கேரளாவில் பீட்ரூட் பச்சடி மிகவும் பிரபலமானது. இந்த பச்சடி கண்களைப் பறிக்கும் அளவில் பிங்க் நிறத்தில் சுவையாக இருக்கும். இந்த கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் ஸ்டைல் பீட்ரூட் பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 2
* தயிர் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/3 கப்
* வரமிளகாய் - 3
* இஞ்சி - 1 இன்ச்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும். பின் பீட்ரூட்டை குக்கரில் போட்டு, சிறிது நீர் தெளித்து, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு அதில் தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறிவிட வேண்டும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் உள்ள பீட்ரூட் பச்சடியுடன் சேர்த்து கிளறினால், கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி தயார்.
Image Courtesy: archanaskitchen