Latest Updates
-
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா?
1/2 மூடி தேங்காயும், கத்திரிக்காயும் இருந்தா இந்த மாதிரி கூட்டு செய்யுங்க... சூப்பரா இருக்கும்...!
Kathirikai Thengai Kootu Recipe in Tamil: சில காய்கறிகள் ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியதாகவும், அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும். அப்படி எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் சுவையான காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். பொதுவாக கத்தரிக்காய் என்றால் அதை சாம்பார் அல்லது புளிகுழம்பில்தான் சேர்ப்பார்கள், ஆனால் உண்மையில் கத்தரிக்காய் வைத்து பல சுவையான உணவுகளை சமைக்கலாம்.
கத்தரிக்காயை வைத்து சாதத்துக்கு மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு அட்டகாசமான சைடிஸ்களை செய்யலாம். அப்படி ஒரு சூப்பரான சைடிஷ்த்தான் கத்தரிக்காய் தேங்காய் கூட்டு. இந்த கத்தரிக்காய் தேங்காய் கூட்டு சாதத்தில் போட்டு சாப்பிட மட்டுமின்றி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்த பதிவில் கத்திரிக்காயை வைத்து சூப்பரான கூட்டு எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 1/4 கிலோ
- தேங்காய் - 1/2 மூடி
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 2
- பூண்டு - 10 பல்
- புளி - ஒரு நெல்லிகாய் அளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- வெந்தயத்தூள் - 1/4 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1/4 ஸ்பூன்
- உளுந்து - 1/4 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- தேங்காயை சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டு, வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு தேக்கரண்டி அளவிற்கு தேங்காயை தனியே எடுத்து அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும், அதேபோல தக்காளியையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கத்தரிக்காயை நன்கு அலசி விட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- புளியைக் கரைத்து வடிகட்டிபுளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பல் தட்டி போட்டு வதங்கியதும், பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
- தக்காளி குலையும் அளவுக்கு வதங்கியதும், நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கி, பின்பு வறுத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் புளிக் கரைசலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
- அடுத்து அரைத்த தேங்காய்ப் பாலை ஊற்றி மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டியவுடன் இறக்கினால் கத்தரிக்காய் தேங்காய் கூட்டு ரெடி!
- இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
