Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
கத்திரிக்காய் வாங்குனா இப்படி சூப்பரா பிரியாணி செஞ்சு பாருங்க - டெஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Kathirikai Biryani Recipe in Tamil:
தென்னிந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த உணவென்றால்
கண்ணை மூடிக்கொண்டு பிரியாணி என்று கூறிவிடுவார்கள். பிரியாணி என்பது
தமிழர்களுக்கு வெறும் உணவு எமோஷனாகும். பொதுவாக பிரியாணி என்றாலே அது
சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். சைவ உணவு உண்பவர்களுக்கு
வெஜிடபிள் பிரியாணி, பன்னீர் பிரியாணி மற்றும் காளான் பிரியாணி.
இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரியாணி மக்களுடன் பிரிக்க முடியாத
பந்தத்தைக் கொண்டுள்ளது.

சிக்கன், மட்டனைப் போலவே ஒரு சில காய்கறிகளை வைத்தும் பிரியாணி செய்யலாம். அந்த வகையில் கத்திரிக்காயை வைத்து ஒரு காரசாரமான சுவையான பிரியாணி செய்யலாம். உங்கள் வீட்டில் சிக்கன், காளான் என எதுவுமில்லை என்றால் கத்திரிக்காயை வைத்து பிரியாணி செய்து எல்லோரையும் அசத்தலாம். உங்கள் குழந்தைகளுக்கு பிரியாணி மிகவும் பிடிக்குமென்றால் அவர்களுக்கு இதை அடிக்கடி செய்து கொடுங்கள், மேலும் இதை நீங்கள் அவர்களுக்கு பள்ளிக்கே மதிய உணவாக கொடுத்தனுப்பலாம்.
உங்களுக்கு சுவையான கத்திரிக்காய் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- நெய் - 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- பழுத்த தக்காளி - 2
- தயிர் - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய்கள் - 3
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- கல்பாசி - சிறிதளவு
- பிரிஞ்சி இலை -1
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- புதினா இலைகள் - சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- தண்ணீர் - 2 கப்
கத்திரிக்காயில் அடைத்து ஊறவைக்க:
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- தனியாதூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு
செய்முறை:
- கத்திரிக்காய்களை நன்றாகக் கழுவி, காம்பை நீக்காமல் நான்கு துண்டுகளாகக் கீறவும். அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
- நிறம் மாறுவதைத் தவிர்க்க, சமையலுக்குப் பயன்படுத்தும் வரை அவற்றை நீரில் மூழ்கவைத்து வைக்கவும்.
- மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் அனைத்தையும், இஞ்சி-பூண்டு விழுதுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை கத்திரிக்காய்களுக்குள் நிரப்பி, 20 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் நெய்யை ஊற்றிச் சூடாக்கி, முழு கரம் மசாலா மற்றும் சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளித் துண்டுகளைச் சேர்த்து, அவை குழைந்துப் போகும் வரை வதக்கவும்.
- இப்போது ஊறவைத்த கத்தரிக்காயைச் சேர்த்து, அது சருமம் சுருங்கும் வரை நன்றாகக் கலக்கவும். பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்த பிறகு, தயிரைச் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, தேவையான அளவு உப்புடன் நீரைச் சேர்க்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் குக்கர் மூடியைத் திறந்து நன்றாக கிளறி விடவும். அவ்வளவுதான் சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி ரெடி. இதை தயிர் வெங்காயத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
