Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
செஃப் தீனா ஸ்பெஷல் கறிவேப்பிலை தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Karuveppilai Thokku Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த, அதே வேளையில் சுவையான மற்றும் குறிப்பாக முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த கறிவேப்பிலை தொக்கை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த கறிவேப்பிலை தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த தொக்கு செய்வதற்கு மிகவும் எளிதானாக இருக்கும். தமிழ்நாட்டின் பிரபல செஃப் தீனா இந்த கறிவேப்பிலை தொக்கை செய்தது இணையத்தில் மிகவும் பிரபலமானது. வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் டக்குனு இந்த தொக்கு செய்தால் குழம்பு பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான கறிவேப்பிலை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 கப் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் புளி
- 7 வர மிளகாய்
- ½ ஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவையான அளவு
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
தாளிக்க:
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன்பெருங்காயம்
- 2 காய்ந்த மிளகாய்
செய்முறை:
- முதலில் புளியை சூடான நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் வர மிளகாய் மற்றும் பெருங்காயத்தை வறுக்கவும்.
- ஆறவைத்து, உப்பு மற்றும் வெல்லத்துடன் சேர்த்து மிக்சியில் சேர்க்கவும்.
- பின்னர், அதில் கெட்டியான புளிக்கரைசலையும் சேர்க்கவும். பின் சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் மிகவும் குறைவான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, கடுகு, நறுக்கிய காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதைச் சேர்க்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து விழுது கெட்டியாகும் வரை கிளறவும்.
- அதன் நிறம் மாறி தொக்கு பதத்திற்கு வந்ததும் மேலும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் தொக்குடன் கலந்து நன்கு சுருளும் வரை கிளறினால் சூப்பரான கறிவேப்பிலை தொக்கு ரெடி.
- செஃப் தீனா இந்த தொக்கை சாதத்தில் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
