Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க... உடல் எடை மடமடன்னு குறையும்.. ருசியானதும், சத்தானதும் கூட...
Karuppu Kavuni Arisi Kanji Recipe In Tamil: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? என்ன செய்தாலும் தொப்பை குறைந்தபாடில்லையா? தொப்பையை குறைப்பதற்காகவே தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, ஜன்க் உணவுகளை தவிர்த்து வருகின்றனர். நீங்களும் அப்படி தொப்யையை குறைக்க நினைத்தால், ஜன்க் உணவுகளை முதலில் தவிர்த்திடுங்கள்.
அதோடு சத்தான உணவுகளை தினசரி உட்கொண்டு வாருங்கள். அதுவும் சிறுதானிய உணவுகள் மற்றும் சில வகையான அரிசிகளை சமைத்து தினசரி உணவில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்தின் மூலம் செரிமான செயல்பாடு சீராக நடக்கும். இதன் விளைவாக உடல் எடை மெதுவாக குறையத் தொடங்கும். அதுவும் கருப்பு கவுனி அரிசியைக் கொண்டு ஒருவர் தினமும் கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடல் எடை வேகமாக குறையும், சர்க்கரை நோய் கட்டுப்படும், கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு கருப்பு கவுனி அரிசி கஞ்சி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கவுனி அரிசி - 100 கிராம்
* தண்ணீர் - 3 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* இஞ்சி - 2 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 5
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* தயிர் - 3/4 கப்
* சின்ன வெங்காயம் - 10 பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, இரவு
தூங்கும் முன் நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் ஊற வைத்த அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு,
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த கருப்பு கவுனி அரிசியை
சேர்த்து, 3 கப் நீரை ஊற்றி, அத்துடன் சீரகம் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு கிளறி, அடுப்பில் வைத்து, தொடர்ந்து கிளறி
விட்டு கருப்பு கவுனி அரிசி கஞ்சியை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன
வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, அரைத்ததை சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி, கஞ்சியுடன் சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் தயிரை நன்கு அடித்து ஊற்றி, அத்துடன் பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிது கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான கருப்பு கவுனி அரிசி
கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications








