Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
கார்த்திகை தீப ஸ்பெஷல்: பருப்பு போளி ரெசிபி
கார்த்திகை தீபத்தன்று பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பருப்பு போளி. இந்த பருப்பு போளி ஒரு நல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பலரும் தங்கள் வீடுகளில் இறைவனுக்கு பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து, தீப வீட்டை விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை தீபத்தன்று பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பருப்பு போளி. இந்த பருப்பு போளி ஒரு நல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ். பள்ளி முடிந்த பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு போளியை செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு பருப்பு போளி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெளிப்பகுதி செய்வதற்கு..
* மைதா - 1 1/2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதல் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, மேலே எண்ணெயை தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் ஆன பின்னர், கடலைப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு ஈரப்பசை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வேக வைத்த கடலை பருப்பு, வெல்லம் சேர்த்து கொரகொரவென்று அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (மென்மையாக அரைத்துவிட வேண்டாம்)
* பின்னர் அந்த பருப்புடன், வறுத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதை சிறு எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவை உருட்டி வைத்துள்ள பருப்பு உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மைதா உருண்டையை எடுத்து, தட்டையாக தேய்த்து, அதன் நடுவே ஒரு பருப்பு உருண்டையை வைத்து, மடிக்க வேண்டும்.
* பின் அதை அப்படியே போளி போன்று தட்டையாக தேய்க்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்தள்ள போளியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று தேய்த்து வைத்துள்ள போளிகளை வேக வைத்து எடுத்தால், சுவையான பருப்பு போளி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
