Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Karnataka Tomato Tambuli Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலை அல்லது இரவு எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? பெரும்பாலும் இந்த இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னியை தான் சைடு டிஷ்ஷாக அதிகம் செய்வீர்களா? குறிப்பாக சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை அடிக்கடி செய்வீர்களா? ஏதாவது வித்தியாசமான அதேசமயம் சுவையான புதிய சட்னியை முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தக்காளி சட்னி பிடிக்குமானால், எப்போதும் ஒரே சுவையில் தக்காளி சட்னியை செய்யாமல், ஒருமுறை கர்நாடகா ஸ்டைல் தம்பிலியை செய்யுங்கள். இந்த வித்தியாசமான சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இந்த சட்னியின் முக்கிய மூலப்பொருட்கள் தக்காளியும், தயிருமாகும். இந்த தம்பிலி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். மேலும் இதுபோன்ற சைடிஷ் செய்தால், வீட்டில் உள்ள அனைவருமே வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் தக்காளி தம்பிலி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 பெரிய தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1/2 கப் தயிர்
- சிறிது கொத்தமல்லி இலைகள்
- 1 டீஸ்பூன் உப்பு
- 1 டீஸ்பூன் நெய்
தாளிக்க:
- 1 வர மிளகாய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- ஒரு கடாயில் நெய்யை ஊற்றிச் சூடாக்கவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் வர மிளகாயை கூட பயன்படுதலம்.
- அதன்பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்து மென்மையாகும் வரை வதக்கவும்
- இது ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- அரைத்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். உங்கள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன்பின் அரை கப் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் வர மிளகாயை சேர்த்து வதக்கி தம்பிலி மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான கர்நாடகா ஸ்டைல் தக்காளி தம்பிலி ரெடி.



Click it and Unblock the Notifications
