கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்

Posted By:

Karnataka Tarkari Pulao Recipe in Tamil: வழக்கமான பிரியாணி மற்றும் தக்காளி சாதம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான அதேசமயம் சுவையான புலாவை செய்ய விரும்புறீங்களா? அப்படினா இந்த கர்நாடகா ஸ்டைல் தர்காரி புலாவை செஞ்சு பாருங்க. வழக்கமான புலாவ் போலவோ அல்லது தக்காளி சாதம் போலவோ இது நிச்சயம் இருக்காது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் பொருட்களும், இது சமைக்கப்படும் முறையும்தான்.

Karnataka Tarkari Pulao Recipe How to Make at Home in Tamil

இந்த தர்காரி புலாவ் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த புலாவ் செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் மிகவும் சுவையானதும் கூட. உங்களுக்கு இந்த கர்நாடகா ஸ்டைல் தர்காரி புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தர்காரி புலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தர்ககாரி மசாலா செய்ய:

- 4 கொத்து கொத்தமல்லி இலை
- 4 கொத்து புதினா இலை
- 1/4 கப் துருவிய புதிய தேங்காய்
- 6 பல் பூண்டு
- 1/2 அங்குல இஞ்சித் துண்டு
- 1/4 கப் வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 1/2 கப் தண்ணீர்

புலாவ் செய்யத் தேவையானவை:

- 3 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 2 பிரிஞ்சி இலைகள்
- 1 ஏலக்காய்
- 1 கிராம்பு
- 1 இன்ச் பட்டை
- 1 அன்னாசிப்பூ
- 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 தக்காளி, நறுக்கியது
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- 2 கப் கலவைக் காய்கறிகள் (பச்சை பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவை)
- தேவையான அளவு உப்பு
- 1 கப் அரிசி
- 2 கப் தண்ணீர்

செய்முறை:

- அரிசியை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

- ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைக்க தேவைப்படும் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் அன்னாசி பூவை சேர்த்து வதக்கவும்.

- மசாலா வாசனை வந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

- வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிய பிறகு, நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

- தக்காளி நன்கு வெந்து மென்மையாகும் வரை வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய காய்கறிகளைச் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றவும்.

- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், ஊறவைத்து வடித்த அரிசியைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

- கலவை கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி வைத்து, மிதமான தீயில் சரியாக 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

- அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரில் உள்ள அழுத்தம் தானாகவே அடங்கும் வரை காத்திருக்கவும்.

- விசில் அடங்கியதும் நன்றாக கிளறி தயிர் வெங்காயத்துடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 5, 2026, 10:42 [IST]
Desktop Bottom Promotion