Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
கர்நாடகா ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபி... இட்லி, தோசைக்கு இது மாதிரி பெஸ்ட் சைடிஷ் எதுவும் இல்ல...!
Karnataka Style Thakkali Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், வெங்காயமும் உள்ளதா? அப்படி இருந்தால் சூப்பரான கர்நாடகா ஸ்டைல் கார சட்னியை செய்து விடலாம்.
இதுவரை நீங்கள் வழக்கமான கார சட்னியைத்தான் இட்லி, தோசைக்கு செய்திருப்பீர்கள். ஆனால் இந்த கர்நாடகா ஸ்டைல் கார சட்னி வழக்கமான கார சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த தக்காளி கார சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 பெரிய தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 3 பல் பூண்டு
- அரை ஸ்பூன் ரசப்பொடி
- அரை ஸ்பூன் மிளகாய் தூள்
- வெல்லம் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 வர மிளகாய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம் மற்றும் 3 பல் பூண்டு சேர்க்கவும்.
- பின்னர் அரை ஸ்பூன் ரசப் பொடி, சிறிதளவு வெல்லம், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இதை நைஸாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் வர மிளகாயை சேர்க்கவும்.
- பின்னர் அதில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்த தக்காளியை இதில் கொட்டி நன்கு கிளறி விடவும்.
- இதை ஒரு மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- உப்பு மற்றும் வெல்லத்தை சரி பார்த்து நன்கு சுண்டியவுடன் அடுப்பை அணைக்கவும்.
- இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications