Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி
கர்நாடகாவில் ராகி உருண்டைக்கு சைடு டிஷ்ஷாக கொடுக்கப்பட்டும் சிக்கன் சாறு அல்லது சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி ராகி உருண்டையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த வார விடுமுறையன்று உங்கள் வீட்டில் கர்நாடகா ஸ்டைல் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கர்நாடகாவில் ராகி உருண்டைக்கு சைடு டிஷ்ஷாக கொடுக்கப்பட்டும் சிக்கன் சாறு அல்லது சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி ராகி உருண்டையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

கீழே கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 300 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீபூன்
* மஞ்சள் தூள் - 1 /4 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் பூன்
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 4
* வரமிளகாய் - 4
* கசகசா - 1 டேபிள் பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு மஞ்சள் சேர்த்து கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசாவைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின் அதில் கிராம்பு, பட்டை, வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்கவும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் துருவிய தேங்காயைப் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும். பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கழுவிய சிக்கன், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். சிக்கனானது நன்கு வதங்கி வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு கப் நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications





