Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் ரெசிபி... வழக்கமான லெமன் சாதத்தை விட இது சூப்பராக இருக்குமாம்...!
Karnataka Chitranna Recipe in Tamil: பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும் பிரதான மதிய உணவாக இருப்பது லெமன் சாதம்தான். இதற்கு காரணம் அதன் சுவையும், அது செய்வதில் உள்ள எளிமையும்தான். ஆனால் ஒரே லெமன் சாதத்தை எத்தனை நாட்கள்தான் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவது. பெரியவர்களை விட குழந்தைகள் உணவு விஷயத்தில் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.
இந்த நிலையில் லெமன் சாதத்தையே வேறுவிதத்தில் செய்து கொடுப்பது அவர்களுக்கு புதிய சுவையைக் கொடுக்கும். கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் செய்து கொடுப்பது எளிதாகவும், புதிய சுவையாகவும் இருக்கும். கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் சித்ரான்னம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உணவு கர்நாடகா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். அங்குள்ள அனைத்து கடைகளிலும் இது பிரதானமாக கிடைக்கும். இந்த பதிவில் இந்த கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதத்தை எப்படி செய்யலாமென்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சமைத்த சாதம் - 2 கப்
- எலுமிச்சைச்சாறு - 4 ஸ்பூன்
- கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- வேர்க்கடலை - 3 ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- நறுக்கிய வெங்காயம் - அரை கப்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- அதன்பின் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு நன்றாக பொரிந்ததும் அதில் 1 ஸ்பூன் உளுந்து மற்றும் 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை
வறுக்கவும்.
- அடுத்து, 3 டீஸ்பூன் வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கருகாமல் சில
நொடிகள் வதக்கவும்.
- அதன்பின் பச்சை மிளகாயை நறுக்கி மற்றும் இரண்டு சிவப்பு மிளகாய்
மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி சேர்க்கவும்.
- இப்போது கறிவேப்பிலை சேர்க்கவும்.
- இப்போது 1/2 கப் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு மென்மையாகும்
வரை வதக்கவும். பின்னர் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சேர்க்கவும்.
- அடுத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு
சேர்க்கவும்.
- அனைத்தும் நன்கு வதங்கியவுடன் இதில் எலுமிச்சைச்சாறை
சேர்க்கவும்.
- இப்போது இதில் கொத்தமல்லி தலைகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- ஏனெனில் எலுமிச்சைச்சாறு கொதிப்பது அதில் கசப்பை அதிகரிக்கும்.
- இப்போது இதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு அதை 30 நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
அப்போதுதான் மசாலாவின் சுவை சாதத்தில் முழுவதுமாக இறங்கும்.
- இப்போது சுவையான கர்நாடகா சித்திரான்னம் ரெடி! இதனை உருளைக்கிழங்கு
பொரியல், தேங்காய் சட்னி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால்
அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications






