Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்..
Karaikudi Murukku Kulambu Recipe in Tamil: தினமும் மதியம் என்ன சமைப்பது என்பதே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் கவலையாக. தினமும் சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம் சுவையான குழம்பை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் இந்த முறுக்கு குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.
அனைவருக்கும் பிடித்த நொறுக்குத்தீனியான முறுக்கை சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு சைடிஷாக வைத்துதான் சாப்பிடுவோம். ஆனால் முறுக்கை வைத்து சூப்பரான ஒரு குழம்பை செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? செட்டிநாடு பகுதிகளில் பொதுவாக அப்பளத்தை வைத்து குழம்பு செய்வார்கள், அதேபோல முறுக்கை வைத்தும் குழம்பு செய்யலாம். இதுபோல குழம்பு வைத்தால் வேறு சைடிஷே தேவைப்படாது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட இது அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு முறுக்கு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முறுக்கு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் நொறுக்கிய முறுக்கு
- ½ கப் வெங்காயம் நறுக்கியது
- 1 தக்காளி
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- 1 ஸ்பூன் சாம்பார் தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள்
- ½ ஸ்பூன் வெல்லம்
- ½ ஸ்பூன் மிளகுத்தூள்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- புளியை சூடான நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, புளிச் சாற்றைப் பிழிந்து, 3 கப் அளவுக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் வெந்தயம் மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
- சீரகம் வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் புளி சாறு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- குழம்பு கொதித்ததும் குழம்புவுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்க்கவும்.
- நன்கு கொதித்ததும் உடைத்த முறுக்கை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கெட்டியானதும், வெல்லம், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான முறுக்கு குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
