Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
காரைக்குடி கார சட்னி ரெசிபி: இட்லி, தோசைக்கு இதைவிட சிறந்த சைடிஷ் எதுவும் கிடையாது... ட்ரை பண்ணி பாருங்க...!
Karaikudi Kara Chutney Recipe: கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது இட்லி மற்றும் தோசைதான். இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் சிறந்த காம்பினேஷனாக இருந்தாலும் தொடர்ந்து அதையே செய்வது மற்றும் சாப்பிடுவது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் நாம் புதிய சட்னிகளை நோக்கி செல்கிறோம்.
புதிய சட்னி என்றாலும் அதில் இரண்டு அல்லது மூன்று ஆப்ஷன்கள்தான் பொதுவாக உள்ளன. அந்த குறையைப் போக்குவதற்குதான் இந்த பதிவு. பொதுவாக சுவையான உணவுகள் என்றால் அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது செட்டிநாடு உணவுகள்தான்.

செட்டிநாடு உணவுகள் எப்போதும் காரசாரமாக இருக்கும். எனவே இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் காரமான காரைக்குடி சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய், கடலை எண்ணெய் - 3 ஸ்பூன்
- நடுத்தர அளவிலான நறுக்கிய வெங்காயம் - 2
- நடுத்தர அளவிலான நறுக்கிய தக்காளி - 2
- பூண்டு - 6 பற்கள்
- காய்ந்த சிவப்பு மிளகாய் - 6
- சிறிய அளவு புளி
- வெல்லம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - தேவையான அளவு
- உளுந்து - தேவையான் அளவு
- கடலைப்பருப்பு - தேவையான் அளவு
- கறிவேப்பிலை
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- ஒரு குக்கரில் 3 ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றவும்.
- நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைச் சேர்த்து
வதக்கவும்.
- ஓரளவு வதங்கியதும் மிளகாய், புளி மற்றும் வெல்லம் சேர்க்கவும்.
- அனைத்தையும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து மூடி மிதமான தீயில்
வேகவைக்கவும்.
- 3 விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து உப்பு சேர்க்கவும்.
- அதன்பின் தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுது போல அரைக்கவும்.
- அதன்பின் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு,
கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து
தாளிக்கவும்.
- அதன்பின் சட்னியை இதில் கொட்டி சிறிது பெருங்காயம் சேர்த்து நன்கு
கலக்கவும்.
- இது இட்லி, தோசை மற்றும் ஊத்தாப்பம் போன்றவற்றுக்கு அருமையான
சைடிஷாக இருக்கும்.
காரைக்குடி என்றாலே அசைவ உணவுகள் மட்டுமல்ல, இதுபோன்ற சுவையான சட்டினிகளும்தான். வழக்கமான தேங்காய் சட்னிக்கு பதிலாக இதுபோன்ற சுவையான மற்றும் காரமான சட்னிகளை அரைத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.



Click it and Unblock the Notifications
