Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
ருசியான... கல்யாண வீட்டு சேனை வறுவல்
Kalyana Veetu Senai Varuval: கிழங்குகளில் சேனைக்கிழங்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும், அது அற்புதமாக இருக்கும். சேனைக்கிழங்கை சமைக்கும் போது, அது அசைவ உணவிற்கு இணையான சுவையைக் கொடுக்கும்.
அதுவும் தமிழ்நாட்டில் கல்யாண வீடுகளில் சேனை வறுவல் செய்வது வழக்கம். அந்த கல்யாண வீட்டு சேனை வறுவல் மிகவும் ருசியாக இருக்கும். உங்களுக்கு மதிய வேளையில் சாம்பாருக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், வீட்டில் சேனைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு கல்யாண வீட்டு சேனை வறுவலை செய்யலாம்.

இந்த வறுவல் செய்வது மிகவும் சுலபம். மேலும் இதை அப்படியே கூட சாப்பிடலாம். உங்களுக்கு கல்யாண வீட்டு சேனை வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சேனை வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 250 கிராம்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கை மெல்லிய 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு, 1/4 கப் நீரை ஊற்றி, 1/2
டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது உப்பு தூவி அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கேறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக ரோஸ்ட்
செய்ய வேண்டும்.
* இந்த நிலையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார்
தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரில் வேக
வைத்துள்ள சேனைக்கிழங்கையும் சேர்த்து நன்கு மசாலா கிழங்குடன் ஒன்று
சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* மசாலா கிழங்குடன் நன்கு ஒன்று சேர்ந்து நன்கு ரோஸ்ட்டாகி இருந்தால்,
அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான கல்யாண வீட்டு சேனை
வறுவல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
