Latest Updates
-
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Kalyana Veetu Senai Kizhangu Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சேனைக்கிழங்கு பிடிக்குமா? எப்போதும் இந்த சேனைக்கிழங்கை ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் இதை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவலை செய்து சாப்பிடுங்கள். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

முக்கியமாக சேனைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்காமல் இருக்க, அதை செய்யும் போது ஒரு பொருளை சேர்த்தால் போதும், நாக்கு அரிக்காது. அது என்ன பொருள் என்பதும், எப்போது சேர்க்க வேண்டும் என்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* சேனைக்கிழங்கு - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 1 டீஸ்பூன்
* மிளகாய தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு..
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 10
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா
* வேக வைத்த சேனைக்கிழங்கு
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு வாணலியில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, கிழங்கை 50
சதவீதம் வரை வேக வைக்க வேண்டும்.
* கிழங்கு ஓரளவு வெந்ததும், அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும்
புளிச்சாற்றினை ஊற்றி மூடி வைத்து, கிழங்கை 75 சதவீதம் வேக வைக்க
வேண்டும்.
* கிழங்கு வெந்ததும், அதை இறக்கி நீரை வடிகட்டிவிட்டு, தனியாக ஒரு
தட்டில் போட்டு, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டிவிட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் சோம்பு, மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய்,
கிராம்பு, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய
தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கிழங்கை பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கை சேர்த்து பொரித்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வறுத்த சேனைக்கிழங்கை சேர்த்து கிளறி, சிறிது நீரை
ஊற்றி பிரட்டி, மூடி வைத்து பச்சை வாசனை போய் நீர் வற்றும் வரை நன்கு
வேக வைத்து இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications