Latest Updates
-
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!'
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Potato Varuval Recipe In Tamil: மதிய வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் பொரியல் அல்லது வறுவல் போன்ற சைடு டிஷ் இல்லாமல் சாப்பிடமாட்டார்களா? இன்று என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு வறுவல் செய்யுங்கள்.

அதுவும் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு வறுவல் செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒரு ஸ்பெஷல் பொடியை தயாரித்து, புதுமையான முறையில் உருளைக்கிழங்கு வறுவலை செய்யுங்கள். இந்த வறுவலை செய்தால், சாதம் சாப்பிடமல் வெறும் வறுவலை மட்டுமே சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு வறுவல் குறித்து ரெசிபீஸ்இன்மைவே என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* வறுத்து அரைத்த பவுடர் - பாதி
* தண்ணீர் - சிறிது
* உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்து,
துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி, குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன்
தோலை நீக்கிவிட்டு, சற்று பெரிய துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு மற்றும்
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் சீரகம், சோம்பை சேர்த்து, வாணலியின் சூட்டில்
வறுக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
பவுடர் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூளையும் சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி மற்றும்
வறுத்து அரைத்த பவுடரில் பாதியை சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில்
வைத்து கிளறி, பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மசாலாவின் பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம்
நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் மீதமுள்ள வறுத்து அரைத்த பவுடரை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications