Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சேனைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி சிப்ஸ் செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Senaikizhangu Chips Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்க ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? அதுவும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் செய்யாமல், சற்று புதுமையாகவும், அட்டகாசமான சுவையிலும் இருக்குமாறான ஒரு ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா?
பொதுவாக சேனைக்கிழங்கை கொண்டு வறுவல், மசாலா என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் சேனைக்கிழங்கைக் கொண்டு சிப்ஸ் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, இதுவரை சேனைக்கிழங்கை சாப்பிடாத உங்கள் பிள்ளைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சிப்ஸ் செய்வதற்கு ஈஸியாகவும், மிகவும் ருசியாகவும் இருக்கும். ஒருமுறை இப்படி செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு சேனைக்கிழங்கு சிப்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேனைக்கிழங்கு சிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்புத் தூள்- 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, குச்சிப் போன்று ஒரே
அளவில் வெட்டி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த சேனைக்கிழங்குடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் சோள மாவு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு
பிரட்டி விட வேண்டும். நீர் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம்
இல்லை.
* பின் அதை மூடி வைத்து குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சேனைக்கிழங்கு
துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மிதமான தீயில் வைத்து,
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சேனைக்கிழங்கு குச்சி சிப்ஸ்
தயார்.



Click it and Unblock the Notifications